கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி, மற்றும் இந்திய மருந்து சங்கம் (IPA) சார்பில், உலக மருந்தாளுநர் தினம்-2024 கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் . ஆர்.சுந்தர் தலைமையில். மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மருந்தாளுநர் தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு மருந்தியல் கல்லூரிகளில் இருந்து 400 மாணவர்கள் பங்கேற்றனர். மருந்து பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருந்தாளுநரின் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
” இந்நிகழ்ச்சியில் கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சி. வி. ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி முதல்வரும், ஐ.பி.ஏ., தலைவருமான முனைவர் டி.கே.ரவி, பி.எஸ்.ஜி., மருந்தியல் கல்லுாரி முதல்வரும், கோவை ஐ.பி.ஏ., செயலருமான முனைவர் எம்.ராமநாதன், பல்வேறு மருந்தியல் கல்லுாரிகளின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஐ.பி.ஏ அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.