விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் பி எஸ் கே நகர் பகுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ( கனரா பேங்க்) ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் ல் காவலாளிகள் யாரும் போடப்படவில்லை. ஏடிஎம்மில் நள்ளிரவு சுமார் 1:30 மணி அளவில் ஒரு நபர் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையிட முயற்சித்த போது திடீரென்று இரு நபர்கள் ஏடிஎம் பணம் எடுக்க வந்ததால் மர்ம நபர் தப்பித்து ஓடி விட்டார். இது குறித்து தெற்கு காவல் நிலைய குற்ற பிரிவிற்கு தகவல் கிடைத்ததும் டிஎஸ்பி பிரித்தி, தெற்கு இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இந்த வங்கியில் ஏற்கனவே நான்கு முறை இதேபோன்று கொள்ளை முயற்சி நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் லட்சக்கணக்கான பணம் வைக்கப்பட்டு இருந்தும் கொள்ளை முயற்சி நடைபெறாதால் பணம் தப்பியது. இனிமேலாவது இந்த வங்கி ஏடிஎம்மில் இரவு காவலாளி போட வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.