திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி. சின்ன ராசா தலைமை வகித்தார்,
கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலை குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு. ராஜா பேசினார். எதிர்கால கடமைகள் குறித்து விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் பேசினார். ஒன்றிய துணை செயலாளர் கே. செல்வராஜ்,தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி. ரவி, இளைஞர் பெருமன்றம் ஒன்றிய செயலாளர் வி.பாக்கியராஜ் உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகின்ற 28-ஆம் அன்று நாகை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் பேரூர், ஒன்றியம் முழுமைக்கும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் எம். ஏ., எம்.பி நன்றி தெரிவிக்க சுற்றுப்பயணம் நடைபெறுகிறது,
அன்று கட்சி தோழர்கள் மிகச் சிறப்பாக வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 1.மேட்டூர் தண்ணியை சுள்ளான் ஆறு வடிகால் வழியாக கொண்டுவர தமிழக அரசை வலியுறுத்துவது. 2.நத்தங்குடி பைபாஸ் வழியில் மேம்பாலம் கட்ட ஒன்றிய அரசை வலியுறுத்துவது, 3.விவசாயிகள் விவசாயத்திற்கு தொடக்க வேளாண் வங்கியில் கடன் பெற கிராம நிர்வாக அதிகாரி சிட்டா அடங்கள் பூர்த்தி பண்ணி உடனடியாக விவசாயிகளுக்கு தர வேண்டும் என வலியுறுத்தியும்,4.நூறாண்டு காணும் வலங்கைமான் காவல் நிலைய கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தியும், 5.வலங்கைமான், ஹரித்துவார மங்கலம் காவல் நிலையங்களுக்கு போதுமான காவலர்களை நியமிக்க வலியுறுத்தியும், 6.வலங்கைமான் அரசு மருத்துவமனையில் மார்ச்சேரி இருந்தும் பணியாளர் இல்லாமல் மூடி கிடக்கிறது எனவே உடனடியாக பணியாளார் நியமிக்க வேண்டும், 7. மருத்துவமனையில் 24 மணி நேரமும் நிரந்தர மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை வலியுறுத்தி எதிர்வரும் அக்டோபர் 15-ஆம் தேதி அன்று சாலை மறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.