தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் போன்ற பகுதிகளில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது

இதன் ஒரு பகுதியாக பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் இரண்டாம் ஆண்டு மரக்கன்றுகள் நடும் விழா தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் கே.ஈச்சம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்திலும் அதே போல் கம்பைநல்லூர் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவிலும் மகாகனி, வேப்பன் போன்ற பல்வேறு வகையான 500 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

மேலும் மொரப்பூர் அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைக்கும் வகையில் இலக்கு உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் தங்களை அணுகி இலவசமாக வாங்கிச் சென்று பயன் பெற்றுக்கொள்ள வேண்டும் என மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *