தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வளையப்பேட்டை பகுதியில் தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்- அமைச்சருமான கருணாநிதி உருவசிலையுடன் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கலைஞர் கோட்டத்தை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் இன்று மாவட்ட ஊராட்சி நிதியில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் தையல் பயிற்சி மையம் மற்றும் கலைஞர் நூலகம், மார்பு அளவு உள்ள மூன்று அடி வெண்கல சிலை உள்பட கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார்.

முன்னதாக மாங்குடி பகுதியில் தி.மு.க. முன்னாள் நிர்வாகி ரத்தினம் உருவ சிலையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கலைஞர் கோட்டத்தை அமைச்சர் உதயநிதியுடன் திஸ்டாலின் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கலைஞர் திருவுருவ சிலை திறந்து வைப்பதை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

234 சட்டமன்ற தொகுதிகளிலும் கலைஞர் உருவ சிலையை திறந்து வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்.பி கல்யாணசுந்தரம் ஆகியோர் கும்பகோணத்தில்
கலைஞரின் கோட்டத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

கும்பகோணம் எப்போதும் தி.மு.க வின் மண் என்பது கருணாநிதிக்கு மட்டும் அல்ல தஞ்சையில் நீலமேகம் தலைமையில்இந்தி எதிர்ப்பு போராட்டம், கருப்பு கொடி போராட்டம் என சிறப்பாக நடத்தினர்.

அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியவர் கலைஞர் கருணாநிதி,
தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 100 சதவீதம் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ்
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 75 ஆண்டுகால கலைஞர் கருணாநிதி வரலாற்றில் இந்தியாவை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர். அதுமட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டியவர்.

தமிழகத்தில் முத்தான திட்டங்களான புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம்,
1கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் மட்டுமல்லாமல் மேலும் மகளிர் உரிமை திட்டம் தகுதியுள்ள அனைத்து
மகளிர்களுக்கும் வழங்கப்படும்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழக உடன்பிறப்புகள் சிறப்பாக பணியாற்றி மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழக முதல்வராக ஆட்சியில் அமர செய்ய வேண்டும் என விழாவில்
பேசினார்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் மாநகர தி.மு.க. செயலாளரும் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயருமான சுப. தமிழழகன் வீட்டுக்கு சென்று அவரது இல்லத்தில் நடைபெற்ற திருமண விழா மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக கும்பகோணம் மூர்த்தியின் கலையரங்கத்தில் கருணா நிதி நூற்றாண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில்
நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டு உப கரணங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோ.வி. செழியன், கலெக்டர் பிரியங்கா பங்கஜம், கல்யாணசுந்தரம் எம்.பி., முன்னாள் எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜவாஹி ருல்லா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்து செல்வம்,ஒன்றிய குழு தலைவர் காயத்ரி அசோக் குமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், ஆனந்தராஜ்,மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *