தருமபுரி மாவட்டம் அரூரில் நீண்ட நாட்களாக நூலக கட்டிடம் இல்லாத நிலையில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நூலகம் வேண்டி அரூர் பகுதி வாசிகள் பதட்டத்தில் இருந்தனர்.
பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமாரிடம் மனு அளித்தனர், அரூர் சட்டமன்ற உறுப்பினர் மனுவை பரிசீலனை செய்து சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த வருடம் 22-06-2023 அன்று நூலக கட்டிடத்துக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்
கட்டிடப் பணியை விரைவில் முடித்து இன்று 27-09-2024 காலை 10:30 மணி அளவில் அரூர் கிளை நூலக கட்டிடத்தை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் தலைமையில் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக தருமபுரி மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர். பசுபதி, அரூர் நகர செயலாளர் ஏ ஆர் எஸ் எஸ் பாபு,பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி,தருமபுரி எம்பி வேட்பாளர் அசோகன்,தர்மபுரி மாவட்ட துணை செயலாளர் செண்பகம் சந்தோஷ்,ஓ. பாஷா, சிவன்,
பழனிமுருகன்,காவேரி,,வார்டு கவுன்சிலர்கள் கலைவாணன், பூபதி, காதர் ,ராணி மனோகரன்,இளைஞர் அணி அரூர் நகர துணை செயலாளர் நேதாஜி
மற்றும் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.