திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்
க.தனித்தமிழ்மாறன்,செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாத குடும்ப அட்டை உள்ள 300 பயனாளிகள், குடும்ப அட்டை இல்லாத 200 பயனாளிகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் பா.சிவனேசன்,அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோம. மாணிக்கவாசகம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான க. செல்வம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, ராணி சோம. மாணிக்கவாசகம், பானுமதி வீ.சி ராஜேந்திரன்,ரம்ஜான் பீவி சிவராஜ்,வீரமணி, நூர்ஜகான் ஜெகபர்அலி,
ஆனந்த், வசந்தி பாஸ்கர், சுமதி தர்மராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
