மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சந்திரபாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் மனோகரன், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் நீதிராஜா கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பொதுத் துறை அரசுத்துறைகளை குறைப்பதை மற்றும் தனியார் மயமாக்குவதை உடனே நிறுத்திட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால முறை ஊதிய திருத்தத்தை உறுதி செய்திட வேண்டும். நிறுத்தி வைக்கப் பட்ட அகவிலைப் படியை நிலுவை யின்றி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.