தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், செப்- 27. தஞ்சாவூர் தமிழ்த்தேசிய பேரியக்கம் அலுவலகத்தில் தமிழ்த்தேசிய பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை தலைமையில் தமிழீழ விடுதலைப் போர் ஈகி திலீபனின் 37 ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது.
தஞ்சாவூர் தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்காகவும். தமிழர்கள் ஈழத்தில் கண்ணியமான வாழ்க்கை
நடத்தவும் சிங்கள பேரினவாத தாக்குதலை நிறுத்தவும் தமிழீழ நாயகம் காக்க வலியுறுத்தி கடந்த 37 ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில் சாகும் வரை உண்ணாநோன்பு மேற்கொண்டு 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் ஈழத்தமிழர்களின் உரிமை காக்க உயிர் நீத்த கேணல் திலீபனின் 37வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் திலீபனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்வில் விடுதலை வித்து என்னும் தலைப்பில் மதிப்புரு முனைவர் குப்புவீரமணி கருத்துரை வழங்கினார்.
பேராசிரியர் பாரி, வணிகர் சங்க ஜெயக்குமார், பழ.ராசேந்திரன், விசிறி. சாமியார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி திலீபனின் தியாகத்தை போற்றினர்.