விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க சி.ம.புதூர் பள்ளி மாணவர்களுக்கு ஆத்திசூடி புத்தகம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு முடிவடைந்த நிலையில் விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க ஆத்திசூடி புத்தகத்தை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் புண்ணிய கோட்டி வழங்கினார்.
மேலும் மாணவர்களின் எழுத்துப் பயிற்சிக்காக எழுது பொருள்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தரணி முல்லை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் டிஆர்.நம்பெருமாள் மாணவர்களுக்கு தக்க அறிவுரைகளை கூறி வாழ்த்துரை வழங்கினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.