கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், குள்ளஞ்சாவடியில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் , மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் அத்தொகையை கூட்டுறவு வங்கியில் சிறப்பு தொடர் வைப்பு செய்யும்பட்சத்தில் அவர்களுக்கு 8% வட்டி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தனர். உடன் அரசு கூடுதல் தலைமை செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் டாக்டர்,ந.சுப்பையன்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத், மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், இணைப் பதிவாளர்/மேலாண்மை இயக்குனர் வசி கோமதி ஆகியோர் உள்ளனர்.