மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறுகிறது. ஒரு மாதம் தொடர்ந்து நடைபெற உள்ள
இந்த கண்காட்சியை கங்கா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் துவக்கி வைத்தார்.
இதில் இம்மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் எஸ் ராஜா சபாபதி, எலும்பியல் துறை தலைவர் டாக்டர் எஸ் ராஜசேகரன், இந்திய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஹரி வெங்கட்ரமணி மற்றும் டாக்டர் சண்முக ராஜா கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே
கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளித்தால் அதை எளிதாக குணப்படுத்தி விடலாம்.இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக
இந்த கண்காட்சி நடைபெறுவதாகவும்,
ஒரு மாதம் நடைபெற உள்ள இதில்,
இதில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளும், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான வழிமுறைகளும் விளக்கப்படுகிறது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ஒருமுறை மார்பகப் பரிசோதனை, ஆண்டுதோறும் செய்யப்படும் மேமோகிராம் பரிசோதனை குறித்தும் விளக்கப்படுகிறது.
கீமோதெரபி குறித்த முறையான தகவல்கள் குறித்தும் இக்கண்காட்சியில் மருத்துவ ஆலோசகர்கள் தெளிவான விளக்கம் தருகிறார்கள்.
மார்பக புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மேல் மூட்டு வீக்கம் பொதுவானது என்றும், மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகு ஏற்படும் மூட்டு வீக்க தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்தும் கண்காட்சியில் தெரிவிக்கப்படுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்கள் கண்டு பயனடைய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்..