விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு ரவுண்டானா பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
ராஜபாளையம் சர்வோதய சங்கம் சார்பில் மேலாளர் கந்த குரு தலைமையில் சீனிவாசன் வி கே பீமா ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து காந்தி பாடிய ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடினார்கள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் ரவுண்டானா காந்தி சிலைக்கு பகிர்வு அறக்கட்டளை தலைவர் செல்வகுமார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மாரியப்பன், மாதர் சங்கம் சார்பில் மைதிலி, முருகானந்தம், ஆசிரியர் சுப்பையா பிகே பீமா ராஜா உட்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ராஜபாளையம் அரிமா சங்கம் சார்பில் டி ராம் சிங், ஜெகதா, எம் எஸ் ஆர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ராஜபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமையில் நகரத் தலைவர் சங்கர் கணேஷ் பொதுச் செயலாளர் டைகர் சம்சுதீன், பொன்சக்தி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.