திண்டுக்கல் மாவட்டம் பழனி வ உ சி மத்திய பேருந்து நிலையம் முகப்பு வாயிலில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் பழனி அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்த தானம் செய்தனர்.
மேலும் இந்நிகழ்வில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார் வனிகர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் கந்த விலாஸ் பாஸ்கரன் வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார் கண்ணுச்சாமி ஈஸ்வரமூர்த்தி
செல்வம் ஸ்டோர் சம்பத் இராதாகிருஷ்ணன் மற்றும் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் மாரிமுத்து மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ராஜா,சாந்தி ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு காந்தி ஜெயந்தி விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
மேலும் இரத்த தானம் செய்த நிர்வாகிகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.