மதுரை காமராசர் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான பால் பேட்மிட்டன் போட்டி ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியில் மதுரை,தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரிகள் பங்கேற்றன.
லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிச்சுற்று ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியும், திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரியும் முன்னேறியது. இதில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றது.
இரண்டாம் இடத்தை திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியும், மூன்றாம் இடத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியும், நான்காம் இடத்தை மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியும் பெற்றது. இப் போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு ராஜூக்கள் கல்லூரி முதல்வர் முனைவர் ராமகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர் முனைவர் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இப்போட்டிக்கு சிறப்பு விருந்தினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் முனைவர் ரமேஷ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வித்துறை இயக்குனர் முத்துக்குமார் நன்றி உரை கூறினார்.