திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி மன்றம் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன..
தொடர்ந்து இக்கூட்டத்தின் தலைவர்
சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை தலைவர் பிருந்தா மாரியப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற
கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை அதிகாரியிடம் தெரிவித்தனர்.
மேலும் இதே போல் கோதைமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கேஜி வலசு பகுதியில் கிராமசபை கூட்டம் தலைவர் செல்வகுமார் துணைத்தலைவர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன.
இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களிடையே தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தனர்.
மேலும் அரசு திட்டங்கள் பற்றியும் நடைமுறையில் உள்ள திட்டங்கள் பற்றியும் பொதுமக்களிடையே எடுத்துக் கூறி கிராம சபை கூட்டம் நடைபெற்றன.