இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் திருவாரூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் முதன்மை மாவட்ட நீதிமன்றம் இணைந்து நடத்தும் காந்தி ஜெயந்தி மற்றும் தூய்மையே சேவை நிகழ்ச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
இத்தூய்மை பணி மற்றும் பேரணியை செல்வமுத்துக்குமாரி முதன்மை மாவட்ட நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்பித்தார்கள் கிருஷ்ணன் துணை நீதிபதி திருவாரூர் விஜய் ஆனந்த் திருவாரூர் ஏழுமலை தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மஞ்சகுடி மற்றும் பாலகிருஷ்ணன் திட்ட அலுவலர் நேரு யுவ கேந்திரா திருவாரூர் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் தன்னார்வல தொண்டர்கள் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக தூய்மை பணி மற்றும் பேரணியில் கலந்துகொண்ட தன்னார்வல தொண்டர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது