மதுரை காமராஜ் பல்கலைக்கழக நீச்சல் போட்டிகள் ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் நடைபெற்றது.
போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நீச்சல் சங்கம் செய்திருந்தது.
போட்டிகளின் முடிவில் லேடிடோக் பெண்கள் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. விழாவில் காமராஜ் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் ரமேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, நீச்சல் சங்க செயலாளர் கண்ணன்,கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் சாந்தமீனா,நெல்சன் மற்றும் அனைத்து கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.