அலங்காநல்லூர்
அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் தனியார் மஹாலில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார். மாநில அம்மா பேரவை துணை செயலாளர்கள் வெற்றிவேல், வக்கீல் திருப்பதி, வாடிப்பட்டிராஜேஷ்கண்ணா, நகரச் செயலாளர்கள் அழகுராஜ், குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், கலந்துகொண்டு கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்களை எடுத்துக் கூறினார்.
நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர் அடையாள அட்டையை நமது உறுப்பினர்களிடம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
இந்த உறுப்பினர் அட்டையை வழங்கி விட்டீர்கள் என்றால் தலைமை கழகத்திலிருந்து புதிய குழு அமைத்துள்ளனர் அந்தக் குழு அனைத்து பகுதிகளுக்கு சென்று உறுப்பினர் அடையாள அட்டை சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளதா என அனைத்து நிர்வாகிகளிடமும் கேட்டு தகவலை பெற்று தலைமைக்கு அனுப்புவார்கள் என்றும் தெரிவித்தார்
தொடர்ந்து பேசியவர் வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரை தொடர்ந்து பேசிய கட்சியின் துணை பொதுச்செயலாளரும் திண்டுக்கல் மாவட்ட செயலாளருமான நத்தம் இ.ரா.விஸ்வநாதன், பேசியது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்த போது நானும் திமுகவில் இருந்தேன் அப்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது அப்போது ஒருங்கிணைந்த மாவட்டமான மதுரையில் தான் சோழவந்தான் தொகுதி வருகிறது
இந்த பகுதியில் வந்து பொதுக்கூட்டங்கள் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டேன். பின்னர் எம்ஜிஆர் அவர்கள் அதிமுகவை தொடங்கிய போது அவருடன் இணைந்து நமது கழகத்திற்கு சென்று விட்டேன் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டமானது அதன் பிறகு அப்பகுதியில் புரட்சித் தலைவர் பின்னர் புரட்சித் தலைவி அம்மா இப்போது அண்ணன் எடப்பாடி தலைமையில் தொடர்ந்து கட்சியில் பயணித்து பணியாற்றி வருகிறோம் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைப் பற்றி கூற வேண்டும் என்றால் ஒரு அருமையான மனிதர் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நான்கு ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது கூட ஏழை மக்கள் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்தித்து பார்த்தனர் திட்டங்களை சிறப்பாக வகுத்து மக்களுக்கு வழங்கியது அதிமுக ஆட்சியில் மட்டும் தான் என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள அருமை நண்பர் உதயகுமாரை பற்றி கூற வேண்டும் என்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் குன்னத்தூர் பகுதியில் திருவுருவச் சிலை அமைத்து தினம் தோறும் காலையில் மாலை அணிவித்து பூஜை செய்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி விட்டு தான் பின்னர் கட்சி பணி தொடங்குவார்.
தலைமை கழகம் என்ன உத்தரவு அவருக்கு வழங்குகிறதோ அதனை உடனே செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர் இவர் இவரைப் போன்று அனைத்து மாவட்ட செயலாளர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார். இதில் தேனி ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான்(எ)செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், எஸ்.எஸ்.சரவணன், ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், கொரியர் கணேசன், ஒன்றிய அவைத் தலைவர் அய்யங்கோட்டை பாலகிருஷ்ணன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயச்சந்திரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.எம்.எஸ் சுந்தரம், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், பாசறை செயலாளர் உமேஷ், சந்தர், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், தேனி கவுன்சிலர் ஐயப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் வக்கீல் லெட்சுமி, துணைச் செயலாளர் மருதாயி, மகளிரணி மாவட்டச் செயலாளர் சாந்தி, அச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீசுதா முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், அலங்கை நகர இணைச் செயலாளர் புலியம்மாள், துணை செயலாளர் லதா, வார்டு செயலாளர்கள் கேபிள் பாஸ்கரன், ஆறுமுகம், வலசை கார்த்திக், ரவி, பாண்டி, விவசாய அணி ஆர்.பி. குமார், தொழிலதிபர் முத்துகிருஷ்ணன்,
பால்பண்ணை தலைவர் காமாட்சி, மற்றும் பைனான்சியர் குமரேசன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் வாடிப்பட்டி மணிமாறன், கோட்டைமேடு பாலன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..