தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் பெரியகுளம் லட்சுமிபுரம் செங்குளம் கண்மாயில் உத்தமபாளையம் நன்செய் தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பில் தேனி மாவட்ட தன்னார்வலர்கள் நடத்தும் 6ஆம் ஆண்டு பனை நடவு 2024 நிகழ்வு எம்பி பிறந்த தினத்தை முன்னிட்டு 3500 பனை விதைகளை எம்பி தங்க தமிழ்ச்செல்வன் நடவு செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தென்கரை பேரூர் திமுக செயலாளர் பாலமுருகன் தென்கரை பேரூராட்சி மன்ற தலைவர் வி. நாகராஜ் பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ் உள்பட நகர பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்