திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழக காவேரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தி.ச.மணி தலைமையில் நில காப்பீட்டுக்கான இழப்பீட்டினை நிபந்தனை இன்றி 100% வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 2023-24 -ம் ஆண்டிற்கான உண்மைக்கு புறம்பான காப்பீட்டு இழப்பீட்டுக்கான அரசாணை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் சம்பா சாகுபடி முற்றிலும் பாதித்ததை அடுத்து நில காப்பீட்டுக்கான இழப்பீட்டை நிபந்தனை இன்றி 100% வழங்கக்கோரியும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு மழையளவை கணக்கில் கொண்டு மகசூல் இழப்பை மறு ஆய்வு செய்து இழப்பீட்டை நிர்ணயம் செய்ய கோரியும், ஆண்டுதோறும் அறுவடை ஆய்வறிக்கையை மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு ஒப்புதல் பெற்று மகசூல் இழப்பை இறுதி செய்வதை கட்டாயமாக்க கோரியும்,முந்தைய மூன்று ஆண்டுக்கான தற்போதைய உத்தேச மகசூல் அளவை இரண்டு மடங்காக உயர்த்த கூறியும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அனுமதிக்காதே என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ராஜேந்திரன், அன்பழகன், ஆனந்த்,ஐயாறு, வைத்திலிங்கம்,தட்சிணாமூர்த்தி, குருமூர்த்தி, முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.