கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் வேங்கடாஜலபதி கோவில் புரட்டாசி மாத பெருவிழாவை முன்னிட்டு கொடயேற்றம்…
திரளான பக்தர்கள் பங்கேற்பு….
தஞ்சாவூர் மாவட்டம் பிரசித்திபெற்ற திருநாகேஸ்வரம் வேங்கடாஜலபதி பூமாதேவி சமேத ஒப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி மாத பெருவிழா முன்னிட்டு கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக பகவத் பிரார்த்தனை அணுவை சேனை முதல்வர் புறப்பாடை தொடர்ந்து பூதேவி சமேத ஒப்பிலியப்பன் கொடிகம்பத்திற்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட மூலப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் வெள்ளி பல்லக்கில் பூதேவி சமேத ஒப்பிலியப்பன் உற்சவம் நடைபெற்றது. இதில் யானை பரிவார தெய்வங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஒப்பிலியப்பன் கோவில் அறங்காவலர்கள் குழு மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.