உலகளாவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். அகில இந்திய அரசியல் கூட்டணி இணை பொதுச் செயலாளர் என். ரெங்கராஜன் வலியுறுத்தல்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைப் பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் திருவாரூரில் இருந்து வெளியிட்ட கூறியதாவது, உலக அளவில் தொடக்க மற்றும் நடுநிலைக்கல்வி கற்பிப்பதற்கு 2030 ஆண்டில் உலகம் முழுவதும் 44 மில்லியன் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் மாணவர்களின் தேவைக்கான ஆசிரியர் பற்றாக்குறை வளர்ந்த நாடுகளிலும் இருந்து வருகிறது இதனை மாற்றும் வகையில் ஆசிரியர்கள் நியமனத்தை அதிகரிக்க வேண்டும். அடிப்படை வசதி குறைந்த பள்ளிகள், பணி அழுத்தம், ஊதியக் குறைபாடு, ஒப்பந்தம் அடிப்படையிலும் தற்காலிகமாகவும் ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்ட காரணங்களால் ஆசிரியர்கள் பணிகளில் இருந்து விலகுவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஆசிரியர்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும். சமூக செயல்பாடுகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும். கல்விக் கொள்கை உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும். தற்காலிக, ஒப்பந்த ஆசிரியர் பணி நியமனங்களை கைவிட வேண்டும். இவைகளின் மூலம் தரமான நிலையான கல்வியை வழங்குவதற்கு ஆசிரியரை ஊக்கப்படுத்த வேண்டும். இதனையே உலக ஆசிரியர் தின வாழ்த்து செய்தியாக தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு ந.ரெங்கராஜன் தெரிவித்துள்ளார்