போடிநாயக்கனூரில் நகர திமுக சார்பில் ரத்ததான முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கட்டபொம்மன் சிலை அருகே தேனி வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி மற்றும் நகர திமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது
தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்றது மற்றும் தேனி பாராளுமன்ற தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பிறந்த நாளை ஒட்டியும் இந்த ரத்ததான முகாம் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது
இந்த முகாமிற்கு வடக்கு மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் சுகன்யா தலைமை தாங்கினார் போடி திமுக நகர செயலாளரும் பண்பாளர் ஆர் புருஷோத்தமன் ரத்த தான முகாமை துவக்கி வைத்தார்
இந்த முகாமில் திமுக முக்கிய பிரமுகர்கள் நகர இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்
இந்த முகாமில் பெறப்பட்ட 30 யூனிட் ரத்தம் தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது முகாமில் இ ரத்ததான கொடையாளர்களுக்கு திமுக நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் என்பதை வலியுறுத்தும் விதமாக நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார்
இந்த முகாமில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் தலைமை செயற்குழு உறுப்பினரும் போடி நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான எம் சங்கர் திமுக வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆசிப் கான் முருகேசன் பஷீர் அகமது உள்பட நகர முக்கிய பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்