கடலூரில்செயற்குழு கூட்டத்தில் அரசு மாவட்ட மருத்துவமனை
கள் வட்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
இஎஸ்ஐ மருத்துவமனைகள்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ரேடியோகிராபர் பயிற்சி பெற்ற இருட்டு அறையில் உதவியாளர்களாக அரசு பணி அமர்த்தம் செய்யப்பட்டவர்களுக்கு ரேடியோகிராபர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
எக்ஸ்ரே துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எக்ஸ்ரே பிரிவில் எக்ஸ்ரே இயந்திரம் வழங்கிய அனைத்து மருத்துவமனைகளுக்கும் புதிய பணியிடங்கள் ரேடியோகிராபர் இருட்டறை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த முறை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர்சுந்தர் ராஜா தலைமையில்
ரம்யா வரவேற்பு ஆற்றிய மாநில துணைத்தலைவர்நல்லதம்பி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாநில செயலாளர் தியாகராஜன் மாநில இணை செயலாளர் செல்வகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ..