மதுரை டவுன்ஹால் ரோடு தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத் துடன் தொடங்கியது. திருவிழா வருகின்ற 13-ந் தேதி தேர் பவனியுடன் முடிவடைகிறது.
மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில்கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்து சிறப்பு திருப்பலியாற்றினார்.
தொடர்ந்து தினமும் மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை வழிபாடும் அதனைத் தொடர்ந்து பல்வேறு பங்கு களை சார்ந்த அருட்தந்தையர்கள் பல்வேறு தலைப்புகளில் மறையுரை நிகழ்த்தி நவ நாள் திருப்பலி நிறைவேற்றி வைக்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்வை மதுரை உயர் மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமஸ் நிறைவேற்றி வைக்கின்றார்.
10-ந் தேதி மாலை திருப்பலி முடிந்தவுடன் நற்கருணை பவனி நடைபெறுகிறது. 13-ந் தேதி அன்று மாலை திருவிழா சிறப்பு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து தேர் பவ னியும் நடைபெறுகிறது.
அத னைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக் கான ஏற்பாடுகளை பங்குத் தந்தையும் தெற்கு மறைவட்ட அதிபருமான அருட்தந்தை அமல்ராஜ் மற்றும் உதவி பங்குதந்தை ஜான்பிரிட்டோ தலைமையில் பங்கு அருட்பணிப் பேரவையினர், பக்த சபையினர், அன்பிய இறை மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.