தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கோவை நேரு வித்யாலயா பள்ளி தலைமையாசிரியை பங்கஜ் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக சால்வை அணிவித்து,பூங்கொத்து மற்றும் பரிசு வழங்கி பாராட்டு..
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற பால் கம்பெனி அருகில் உள்ள நேரு வித்யாலயா தலைமை ஆசிரியை பங்கஜ் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..
பள்ளி நிர்வாகத்தின் தலைவர் மஹாவீர் போத்ரா தலைமையில் நடைபெற்ற விழாவில்,துணை தலைவர் கமலேஷ் பாஃப்னா,
செயலாளர் கோபால் புராடியா,கல்லூரி துணை செயலாளர் பரத் ஜெகமணி,பொருளாளர் அசோக் லூனியா,துணை பொருளாளர் நிஷாந்த் ஜெயின், முன்னாள் தலைவர்கள் பால்சந்த், மாங்கிலால் ஜெயின் ஆகியோர் முன்னி்லை வகித்தனர்..
தொடர்ந்து சிறந்த நல்லாசிரியர் விருது தலைமையாசிரியைக்கு தங்களது வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்தனர்..
முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மேடைகளில் ஏறி தங்களது தலைமையாசிரியை நிர்வாகத்திறமை,
மற்றும் கல்வி பணியில் அவரது அர்ப்பணிப்பு குறித்து பேசினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் தலைமையாசிரியை பங்கஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்தும்,பூங்கொத்து வழங்கி மாலை அணிவித்து பாராட்டப்பட்டது..
பின்னர் நேரு வித்யாலயா பள்ளிக்கு பெருமை சேர்த்த தலைமையாசிரியை பங்கஜ் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக 51,000 ரூபாய் காசோலை வழங்கி கவுரவித்தனர்…