பென்னாகரம் ஒன்றியம் செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் பருவ பாட நூல் மற்றும் நோட்டு வழங்கும் நிகழ்வு.
பென்னாகரத்தை
அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்கு
உட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 110 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல் வழங்கும்
நிகழ்வு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமையில் நடைப்பெற்றது.
பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலர்
இரா. மணிகிருஷ்ணன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கி இரண்டாம் பருவத்தில் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அரசின் நலத்திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண தன்னம்பிக்கையுடன் படித்து முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் கோவிந்தன்,
ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி,கல்பனா,
திலகவதி,ராஜேஸ்வரி மற்றும் சத்துணவு பணியாளர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.