தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்நகராட்சி சுவாச்ஹாதா ஹய் சேவா 2024 தூய்மையே எனது பழக்கம் தூய்மையே சேவை
என்ற தலைப்பின் கீழ் போடிநாயக்கனூர் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை சிறப்பித்து ஊக்குவிக்கும் விதமாக சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் கா. ராஜலட்சுமி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தனர்
மேலும் நகராட்சியின் சார்பாக பசுமை நுண் உரக் குடில் நுழைவு வாயிலில் பசுமையை போற்றும் விதமாக எம்.சி சி மரக்கன்றுகள் நடப்பட்டன சுகாதார ஆய்வாளர் திருப்பதி நன்றி கூறினார்