தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாச நாதர் மலைக்கோயிலில் நவராத்திரி திருவிழா ஆறாம் நாள் நவராத்திரி விளக்குபூஜை சிறப்பாக நடைபெற்றது. விளக்கு பூஜையில்,பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.
கைலாசநாதர் சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனைகளும் நடைபெற்று , பின்னர் சஷ்டி பூஜைகள், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனையும் நடைபெற்றது.
அதிக பக்தர்கள் வருகை தந்தனர். வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.