நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
கொளப்பாடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.5 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள கொளப்பாடு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைப்பெற்றது.
இந்த முகாமில் வருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத்திட்டம் ,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி ஆகியோர் ரூ.5 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன்,வட்டாட்சியர் சுதர்சன், ஊராட்சி மன்றத்தலைவர் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ், சிங்காரவேல் மற்றும் அரசுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.