தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மாதாக்கோட்டை சாலையிலிருந்து லட்சுமி திருமண மண்டபம் வழியாக நாஞ்சிக்கோட்டை பிரதான சாலையை இணைக்கும் பிரதான சாலையைச் சீரமைத்து தர வேண்டும் என்ற மக்களின் நீண்ட கோரிக்கை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் முயற்சியால் இந்த சாலைக்கு முதல்வர் சிறப்பு நிதியிலிருந்து ரூபாய் 75 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து. அந்த சாலையின் ஆரம்பப் பணியைத் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வ.சத்யராஜ், ஒன்றிய செயலாளர் S.செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் N.K ராஜா மாதாக்கோட்டை பெஞ்சமின் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்களும் கலந்து கொண்டு துவககி வைத்தனர்.