ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது!
ராஜபாளையம், அக்.10- ராஜபாளையம் அருகே சேத்தூர் புறக்காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் முருகராஜ் தலைமையில் சுந்தரராஜபுரம் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்து வந்தனர்.
அரசு மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நின்றுகொண்டிருந்த இளைஞர்களிடம் கஞ்சா புழங்குவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 450 கிராம் கஞ்சா, ரூ.400 கைப்பற்றி அதே பகுதியைச் சேர்ந்த ராமராஜ் (34), ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த சங்கிலிகணேஷ் (23), துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த சூர்யா (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.