திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் குப்பநத்தம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால் அணையின் நலன் கருதி இன்று பிற்பகல் 3 மணி அளவில் குப்பநத்தம் அணை திறக்கப்படுவதால் செய்யாற்றின் கரையோர உள்ள பொதுமக்கள் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென நீர்வளத்துறை உதவி பொறியாளர் ஹரிஹரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்
மேலும் செய்யாற்று அருகே உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்துள்ளார்