வலங்கைமான் லாயம் பகுதியில் ஐந்து ஆலயங்களின் சுவாமிகள் அம்பு போடும் இடத்தில் பேரூராட்சி சார்பில் தூய்மை பணி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன்,செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மாரியம்மன், ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ கோதண்டராமசாமி, ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆகிய ஐந்து ஆலயங்களில் இருந்து நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு விஜயதசமி அன்று வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் உள்ள லாயம் பகுதியில் வருடம் தோறும் சாமிகள் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதேபோன்று இந்த ஆண்டும் இன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு வலங்கைமான் பேரூராட்சி மன்றம் சார்பில் சுகாதார மேற்பார்வையாளர் அம்பேத்கர் குமார் மேற்பார்வையில், பேரூராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர்.