பெரம்பலூர்.
சென்னையில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பிரிவு அலுவலகம் தூய்மை இந்தியா 2024 இன் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
இதன் ஒரு நிகழ்வாக பெரம்பலூர் மாவட்டம் காரை கொளக்காநத்தம் சாலையின் பகுதியில் புவியியலின் மிகவும் தொன்மை மற்றும் சிறப்பு வாய்ந்த”காரை பாழ் நிலப்பகுதி” அமைந்துள்ளது.
இந்த சிறப்பு மிகுந்த தேசிய புவியியல் நினைவு சின்னத்தில் அக்டோபர் 11 2024 சிறப்பு பிரச்சாரம் 4.0 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பிரிவின் சார்பில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்திய கனிமவள அமைச்சகத்தில் இருந்து திரு அலோக்குமார் துணைச் செயலாளர் புதுடில்லியில் இருந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த நிலையில் அவரின் வேறு சில அலுவலகப் பணிகளின் காரணமாக அவரது பயணத்திட்டம் ரத்தானது. அவரது வாழ்த்துச் செய்தியுடன் திட்டமிடப்பட்ட இந்நிகழ்ச்சியானது தொடர்ந்து நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பிரிவின் தலைவர் திரு பி. அஜயகுமார் அவர்களின் மேற்பார்வையில் திரு எஸ் என் மாரியப்பன் இயக்குனர் மற்றும் அலுவலகத் தலைவர் அவர்களது வரவேற்புரையோடு நிகழ்ச்சி நிரல் தொடங்கியது.
திரு விஜயகுமார் மாநில பிரிவு தலைவர் தமது முகப்புரையில் காரை நிலப்பகுதியினை பேணி பாதுகாக்க வேண்டியதன் கடமையையும் மற்றும் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அவறினை தொடர்ந்து திரு ஜி நாகேந்திரன் இயக்குனர் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் காரை பாழ்நிலப்பகுதி குறித்து சிறு விளக்க உரையினை தமிழில் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எடுத்துக் கூறினார்.
இந்த நிலப்பகுதியானது சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடல் சூழ்ந்த பகுதியாக இருந்ததையும் கடல் முன்னோக்கி நகர்தல் மற்றும் கடல் உள்வாங்குதல் சுழற்சிகளின் விளைவாக இவ்வாறான பால் நிலப் பகுதி ஏற்பட்டதையும் இதே போன்ற நிலப்பரப்புகள் இந்தியாவின் ராஜஸ்தான் மத்திய பிரதேச மற்றும் உத்திரபிரதேசத்தின் சில எல்லைப் பகுதிகளிலும் மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளிலும் இருப்பதனை கூறினார்.
உலகளவில் இந்த நிலப்பரப்பை போன்று பத்து இடங்களில் மட்டுமே இந்த வகையான பால் நிலப்பகுதி அமைந்துள்ளது
இவ்வளவு அரிதான இந்தப் பகுதியினை யுனெஸ்கோவின் புவியியல் துறை மற்றும் உலக புவியியல் துறையின் சார்பாக பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக அறிவித்துள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டில் மத்திய அமைச்சராக இருந்த திரு வி சுவாமிநாதன் அவர்கள் இந்திய கனிமவள அமைச்சகத்திடம் இந்தப் பகுதியினை புவியியல் அருங்காட்சியமாக அமைத்து உலக புவியியல் துறை மாணவர்களுக்கும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திடவும் ஒரு அருங்காட்சியம் அமைத்திட கோரிக்கை வைத்தார்.
அதன் பயனாக இந்திய புவியியல் துறை ஆனது நமது காரை கொளக்காநத்தம் பகுதியில் தேசிய புவியியல் நினைவுச் சின்னமாக 2015 ஆம் ஆண்டு அறிவித்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காரை பஞ்சாயத்து தலைவர் திரு கலையரசன் அவர்கள் இந்தப் பகுதியினை தாங்களும் கிராம மக்களும் பாதுகாத்திடுவோம் என்று கூறினார்.
மற்றொரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காரை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு எம் பிரபாகரன் அவர்களும் தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவியருக்கும் இந்த நிலப் பகுதியின் முக்கியத்துவத்தினை எடுத்துரைப்போம் என்று கூறினார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்றான தூய்மை பணியினை காரை பஞ்சாயத்தில் செய்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள் நான்கு நபர்களுக்கு இந்திய புவியியல் துறையின் மாநில தலைவர் அவர்களை கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து மேலும் அவர்களது இந்தச் சேவையை பாராட்டி சிறிய அன்பளிப்பையும் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காரை அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்களிடையே எழுத்து மற்றும் ஓவியப் போட்டியும் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது இதில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டமாக தூய்மை பணியின் முக்கியத்துவம் குறித்து “விழிப்புணர்வு நடைப்பயணம்” காரை ஊர் பகுதியில் இந்திய புவியியல் துறையின் மாநில பிரிவினை சேர்ந்த அனைத்து நிலை அதிகாரிகளும் அலுவலர்களும் காரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களும் திரு. திருமுருகன் மேற்பார்வை புவியியலாளர் தலைமையில் “தூய்மை இந்தியா முழக்கங்களோடு” பள்ளி வளாகம் வரை நடைபயணம் மேற்கொண்டனர்.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக திருமதி பவானி, ஆர். இயக்குனர் அவர்களின் நன்றியினையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.