திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 3 ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

கடந்த 9 நாட்களாக விமர்சையாக கொண்டாடப்பட்டுவந்த. நவராத்திரி விழாவில் 10ம்நாள் விழாவான விஜயதசமி தினமான வன்னிகாசூரனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி அருகே உள்ள கோதை மங்களம் கிராமத்தில் உள்ள கோதைஈஸ்வரர் கோயில் முன்பு நடைபெற்ற வன்னிகாசுரன் வதத்தை முன்னிட்டு மலைக்கோயிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது.

தொடர்ந்து மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு, பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பழனி ஆதினம் சிவானந்த புலிப்பாணி சித்தரை, கோயில் நிர்வாகம் தேவதா மரியாதையுடன் பல்லக்கில் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் துர்க்கையாக ஆவாஹனமாகி வாழைமரம் மற்றும் வன்னி மரத்தில் அம்பெய்தி வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. நவராத்திரி முடிந்து விஜயதசமி அன்று நடந்த நிகழ்ச்சியில் அயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

பழனி முருகன் கோயிலில் 13 ம் நூற்றாண்டில் இருந்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தீய குணம் கொண்ட  வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள் தங்கள் மனதில்  உள்ள தீய எண்ணங்களும் அழிந்து போவதாக நம்புவதால் ஆண்டு தோறும் நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *