கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா…
100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கினர்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில்
90% மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கியும், தீபாவளி வஸ்திர தானம் மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிராமணர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ பம்மல் ராமகிருஷ்ணன் , மாநில பொருளாளர் ஜெயராமன், மாநில செயலாளர் பாலாஜி மாநில துணைத்தலைவர் கார்த்திகேயன் , மாவட்ட பொதுச் செயலாளர் இராமசந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இதில் மாநில பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், மாணவ மாணவிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.