மாநில அளவில் நடைபெற்ற கராத்தே மற்றும் குவான்கிடோ போட்டியில் கோவை தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள் எட்டு பேர் தங்க பதக்கம் வென்று தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளனர்..
இந்திய அரசு பள்ளி விளையாட்டு குழுமம் எஸ் ஜி எஃப் ஐ (S.G.F.I)
சார்பாக அண்மையில் மாநில அளவிலான கராத்தே போட்டி காரைக்குடியில் நடைபெற்றது..
இதில் கோவையை சேர்ந்த தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் இரண்டு பேர் தங்க பதக்கம் வென்று முதலிடம் பிடித்தனர்..
இதே போல மாநில அளவில் நடைபெற்ற குவான்கிடோ போட்டியில் ஏழு பேர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்..
இதனை தொடர்ந்து வெற்றி பெற்று தேர்வாகி உள்ள மாணவ,மாணவிகள் அடுத்து டெல்லி,மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டு விளையாட உள்ளனர்..
இந்நிலையில் வெற்றி பெற்று தேசிய அளவில் தேர்வாகி கோவை தி்ரும்பிய மாணவ,மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு வழங்கி பாராட்டு விழா நடத்தினர்..
இதில் தேசிய அளவில் தேர்வாகிய மாணவ,
மாணவிகள் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் யுத்திகா, சபரீஷ்,
பரத் விக்னேஷ்,ராம்ஜி,.சஸ்வர்த்,தமிழரசி,அனீஸ்,மகாலட்சுமி ஆகியோருக்கு ஹயாசிகா கராத்தே பெடரேஷன் தலைமை பயிற்சியாளர் வி.எம்.சி.மனோகரன் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்..
இது குறித்து கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் சதீஷ் கூறுகையில்,
மாநில அளவில் கராத்தே,மற்றும் குவான்கிடோ போட்டியில் எட்டு மாணவ,மாணவிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளதாக கூறிய அவர்,இதில் அரசு பள்ளியில் பயிலும் மாணவியும் வெற்றி பெற்று தமிழக அணிக்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்..
முன்னதாக ஹயாசிகா கராத்தே பெடரேஷன் அமைப்பின் பட்டைய தேர்வில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கு தகுதியின் அடிப்படையில் பட்டையங்கள் வழங்கப்பட்டன..