ஞான சரஸ்வதி விருதுக்கு தேர்வு பெற்ற வலங்கைமான் அருகே உள்ள தென்குவளை வேலிஅரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு பள்ளிகள் பாராட்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளை வேலி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் எழுதிய “நீர் தேடும் நிலம்” என்ற சிறுகதை சென்னை உத்திராடம் பதிப்பகம் சார்பில் ஞான சரஸ்வதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்ட நிலையில் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் விருது பெற்ற ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஏற்புரை வழங்கிய ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் பரிசு தொகையிலிருந்து ஒரு பகுதியை மெல்ல கற்கும் மாணவர்களின் மேம்பாட்டிற்காக வழங்குவதாக அறிவித்தார்.