ராஜபாளையத்தில் ரயில் பெட்டிகளில் விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டம் ! நிற்கக்கூட இடமில்லாமல் தொங்கி செல்லும் நிலை!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு வருமானம், மக்கள் தொகை, தொழில் வளம், விவசாயம் போன்றவை அதிகம் உள்ள பகுதியாகும். ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு வந்து தான் கல்வி. வியாபாரம். மற்றும் மருத்துவம். வேலை. நிமித்தமாகவும் சென்னை. மதுரை.வியாபாரம் நிமித்தமாக கேரளா. போன்ற பகுதிகளுக்கு அதிகளவில். பயணம் செய்யும் நிலை இருந்து வருகிறது.
மேலும் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காலை நேரங்களில் சிவகாசி, விருதுநகர், மதுரை போன்ற நகரங்களுக்கு அரசு ஊழியர்கள், மற்றும் தனியார் மற்றும் இதர தொழிலாளர்கள், அலுவலர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இவர்கள் இந்த ரயில் போக்குவரத்தையே நம்பி இருக்கின்றனர். இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த ரயிலில் ராஜபாளையத்தில் இருந்து பயணம் செய்யும் நிலை உள்ளது. ராஜபாளையத்திற்கு வரும் ரயில்கள் பெரும்பாலும் கொல்லம், குருவாயூர், செங்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்தே வந்து கொண்டிருக்கிறது.
இப்பகுதிகளில் இருந்து வரும் ரயிலில் ஏற்கனவே ரயில் பயணிகள் அதிகமாக பயணம் செய்து வருகின்றனர். இவர்கள் ஆயிரக்கணக்கானோர் ரயிலில் ஏறும்போது நிற்கக்கூட இடமில்லாத அவலம் தொடர்கிறது.
கழிப்பறைகளில் கூட நின்று பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க ராஜபாளையம் வழியாக செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், கொல்லம் மெயில், பொதிகை எக்ஸ்பிரஸ், மற்றும் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களுக்கு கூடுதலான பெட்டிகள் இணைத்து ரயில் பயணிகள் சிரமத்தை போக்குமாறு பொதுமக்கள், மற்றும் ரயில் பணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.