கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியின் பி.எட் .முதலாம் ஆண்டு துவக்கவிழா….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் பி.எட் முதலாம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது.அனைவரையும் வரவேற்கும் விதமாக திருமதி.D.இலக்கியா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.இவ்விழாவில் கல்லூரி தாளாளர், திரு.S.கலியமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர்.மி.மில்டன்ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தும் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக முனைவர்.D.ஜான்சி அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பெண்கல்வி பற்றியும் பண்புகளையும் எடுத்துக்கூறி மாணவ ஆசிரியரின் மாணவிகளுக்கு கவிதையாகவும் பாடல்கள் மூலமாகவும் தன் கருத்துகளை வழங்கினார். திருமதி. ஜோதி கலியமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு,மரியாதை செய்யும்விதமாக பொன்னாடை போற்றினார்.
மேலும் கல்லூரியின் முதல்வர், சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். கல்லூரியின் பேராசிரியர்களான எழிலரசி, இலக்கியா, வித்யா, முருகவேணி, காமாட்சி, ரூபிலா மற்றும் திரு.இராமச்சந்திரன் அவர்களும், மாணவர்களும் ஆசிரியப் பணியின் பெருமைகளைப் பற்றி பேசினார்கள். இறுதியாக அனைவருக்கும் திருமதி, ரூபிலா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.