விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அய்யனார் கோவில் ஆறு மாவரசி அம்மன் கோவில் ஆறு முள்ளிக்கடவு ஆறு போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் தண்ணீரை ராஜபாளையம் நகராட்சி 6 வது மைல் புதிய நீர்த்தேக்கம் மற்றும் பழைய நீர் தேக்கத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கடந்த 10 தினங்களுக்கு முன்பு கடுமையான வெயில் கடுமையான காட்சியினால் தண்ணீர் வரத்து மிகவும் கணிசமாக குறைந்த நிலையில் தற்போது மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் அதிகமாக வருவதால் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மழை காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.