கோவை த.வெ.க நிர்வாகிக்கு கூடுதல் பொறுப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகின்றது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் செய்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பரிந்துரையின் பேரில் மாநாட்டின் பாதுகாப்பு மேற்பார்வை குழு ஒருங்கிணைப்பாளராக த.வெ.க கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷை நியமனம் செய்து த.வெ.க தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.