தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் கழகம் சார்பில் அஇஅதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பெரியகுளம் நகர் கழகச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் கோவிந்தன் மயில்தாயம்மாள் மஹாலில் நடைபெற்றது,
நிகழ்ச்சியின் போது சிறப்பு அழைப்பாளராக மதுரை மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜ் கலந்துகொண்டு கழக ஆக்கபூர்வ செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், கழக வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்,
இந்நிகழ்வின் போது தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முறுக்கோடை ராமர், பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் அனுமந்தன், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் பெரிய வீரன்,மாநில வழக்கறிஞர் அணி ஜெயராமன், மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு சலீம், மாவட்ட பொருளாளர் வைகை பாண்டி, மாவட்டத் துணைச் செயலாளர் சோலைராஜ், மாவட்ட அவைத் தலைவர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் தவமணி கருப்பசாமி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பாலச்சந்தர், மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு தவமணி,மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ், விஜய் ஆனந்த், மோகன் லதா, நகர அவைத்தலைவர் கோம்பையன், நகர பொருளாளர் கமலக்கண்ணன், நகரத் துணைச் செயலாளர்கள் வெங்கடேஷ் செல்லம்மாள், நகர அம்மா பேரவை செயலாளர் ஜெயசீலன், எம்ஜிஆர் ரசிகர் மன்ற நகர செயலாளர் கணேசன், மகளிர் அணி நகர இணை செயலாளர் முத்துலட்சுமி, ஜெனிதா, அமுதா, முருகேஸ்வரி, தகவல் தொழில் நுட்ப அணி துரைபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள், வார்டு கழகச் செயலாளர்கள் பிரதிநிதிகள்,தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.