தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சை கல்லுகுளம் மக்கள் மன்றத்தில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கீழவாசல் பகுதி செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் சரவணன், மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் மனோகர், கரந்தை பகுதி செயலாளர் பஞ்சாபிகேசன், கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான வளர்மதி கலந்து கொண்டு பேசும் போது:- தமிழ்நாட்டில் வாரிசு அரசியலுக்கு பெயர் போனது திமுக ஆனால் அ.தி.மு.க.வில் சாமானியர்களும் கட்சியின் உயர் பொறுப்புக்கு வரலாம். தமிழ்நாட்டை குடிகார மாநிலமாக மாற்றிய பெருமை தி.மு.கவை சாரும் அக்கா கனிமொழி கடந்த தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்கும் போது எங்கள் அண்ணன் ஸ்டாலின் பதவிக்கு வந்தால் மது ஒழிப்பை கொண்டு வருவார்கள். தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். குடிமக்களால் அவர்களின் எந்த பணமும் கொடுப்பதில்லை பிள்ளைகளின் கல்வி வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி மகளிரிடம் வாக்கு கேட்டார். டாஸ்மாக்கை மூடுவோம் என்று கூறியவர்கள் இன்று 3 ஆயிரம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் 24 மணி நேரமும் சரக்கு கிடைக்கும் இடமாக அது உள்ளது. கடந்த தேர்தலில் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை தருவதாக வாக்களித்தார். ஆனால் இன்று தகுதி படைத்த மகளிர்க்கு மட்டுமே உரிமைத் தொகை என்று கூறுகிறார். இலவசம் மட்டும் தான் தகுதி உள்ளவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். உரிமை தொகை என்றால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். அம்மா மகளுக்கு தாலிக்கு தங்கம் திருமண உதவித் திட்டம் இளம்பெண்களுக்கு கல்வி கற்க லேப்டாப், மகளிருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் போன்ற எண்ணற்ற திட்டங்களை வழங்கி வந்தார். அதை நிறுத்தியது ஸ்டாலின் அரசு. ஸ்டாலின் அரசின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச் சென்று வீடு வீடாக நமது சகோதரிகள் விரிவாக பேச வேண்டும். ஏனென்றால் சகோதரர்கள் வாழ்க்கை கேட்க வீட்டு வாசல் வரைக்கும் தான் வர முடியும். பெண்களாகிய நாம் தான் வீட்டிற்குள் உள்ளேயும் சென்று பேச முடியும். இந்த திமுக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எடுத்து கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் விவேக் வரவேற்றார். தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், கழக கொள்கை பிறப்பு துணைச் செயலாளர் துரை. திருஞானம், விவசாய பிரிவு இணைச் செயலாளர் இராஜமாணிக்கம், கழக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் துரை. வீரணன், கழக அம்மா பேரவை இணை செயலாளர் அறிவுடைநம்பி, மாவட்ட கழக இணைச் செயலாளர் சாவித்திரி கோபால், மாநகர கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்திகாந்தி, நிர்வாகி கேபிள் செந்தில் மற்றும் மாநகர, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாமன்ற உறுப்பினரும் கீழவாசல் பகுதி அம்மா பேரவை செயலாளருமான கேசவன் நன்றி கூறினார்.