கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, போச்சம்பள்ளி ஒன்றியம், காட்டாகரம் ஊராட்சி, அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டி மற்றும் இலவச மரகன்றுகளை வழங்கியும், மேலும் ரூ.42 இலட்சம் 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கிராம செயலக கட்டிட திறப்பு விழாவில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை மாண்புமிகு அமைச்சர் அர.சக்கரபாணி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA ஆகியோர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றி ஊராட்சி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கெ.கோபிநாத்.MP கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர்.கே.எம்.சரயு, மாநில, காட்டக்காரன் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் ஆர் ரங்கநாதன், போச்சம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சாந்தமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சண்முகம், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள்,அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் , மற்றும் BLA2 நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்