திருப்பூர்மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 333 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்கள்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அவர்கள் 01 பயனாளிக்கு விபத்து நிவாரணமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) ஜெயராமன், திட்ட இயக்குநர் (மகளிர்த்திட்டம்) சாம் சாந்தகுமார், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) குமாரராஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வி, துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *