தென்காசி
தென்காசி மாவட்டம் கடையம் அடுத்துள்ள கல்யாணிபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் ராசம்மாள் என்பவர் காயம் அடைந்தார். அதிகாலையில் வீட்டின் அருகே கரடி தாக்கியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக தென்காசி மாவட்ட பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் யானைகள் மற்றும் கரடி சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் போவது வாடிக்கையாகிவிட்டது யானைகளின் கூட்டம் வடகரை அச்சன்புதூர் மேக்கரை பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது
இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை பெரும் அச்சத்தோடு எதிர்கொள்கின்றனர்