அரியலூரிலிருந்து சென்னைக்கு 3
புதிய பேருந்துகள் தொடக்கி வைப்பு.
அரியலூரில் இருந்து சென்னை கிளாம்பாக்கத் திற்கு 3 புதிய அரசு பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டன.
அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழச்சியில்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப் பா, சென்னைக்கு, ஜெயங் கொண்டம், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக செல்லும் 3 புதிய அரசுப் பேருந்துகளை கொடி யசைத்து தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மதிமுக செயலாளர் இராமநாதன், பெரம்ப லூர் -அரியலூர் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் ராமநாதன், அரியலூர் கிளை பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், வணிக மேலாளர் சாமிநாதன் ,அரியலூர் கிளைமேலாளர்குணசேகரன்,
அரசு போக்குவரத்து கழக பணிமனை,அரியலூர் கிளை தொமுச செயலாளர் பி வி அன்பழகன்அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் சங்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.